அறிவிப்புகள்

என்னைப்பற்றி

BK, பாரதி, குமார், கிருஷ்ணகுமார், BKKumar, கிருஷ், கிருஷ்ணா, இன்னும் பாரதி கிருஷ்ணகுமார் என்று விதம் விதமாய் அழைக்கப் படுகிற என்னைப் பற்றி எனக்கென்ன தெரியும்? இந்தக் கேள்வி என்னை உற்சாகப் படுத்துகிறது. இருக்கட்டும்.

உயிரும், உடலும் தந்த அம்மாவையும், அப்பாவையும் பற்றிச் சொல்லாமல் என்னைப் பற்றி என்ன சொல்லி விட முடியும் என்று தெரியவில்லை. வழி காட்டிய ஆசான்கள், செதுக்கிய புத்தகங்கள், ஆருயிர் நண்பர்கள், சூழ வந்த அனுபவங்கள் என்று சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. எதை முதலில் சொல்வது, எதை அடுத்துச் சொல்வது என்று தீர்மானிக்க இயலாத வண்ணம் அனைத்தும் ஒரே அடுக்கில், ஒரே வரிசையில் கலந்து, இணைந்து நிற்பதை எங்கனம் பிரிப்பதென்றே விளங்கவில்லை.

“  மிகக் கடுமையான உழைப்பாளி ” என்று பொது மேடையில் ஒருவர் பகிரங்கமாகப் பாராட்டுகிறார். அவன் “ சுகவாசி, சோம்பேறி “ என்று பகிரங்கமாகக் கண் சிமிட்டுகிறார் வேறொருவர். “ஆவனப்பட இயக்குனர்” என்று தெரிந்து வைத்திருக்கிறார் ஒருவர். எந்த மேடையிலும் உயிர்ப்புடன் பேசும் கலைஞன் என்றொருவர் சொல்லுகிறார். ஆகச்சிறந்த சிறு கதைகள் எழுதி இருக்கிற படைப்பாளி என மற்றொருவர் அறிமுகம் செய்து வைக்கிறார். ஒரு தொழிற்சங்கத்தைத் தானே உருவாக்கி, வளர்த்து ஆளாக்கிய ஆற்றல் மிக்க தலைவன் என்கிறார் இன்னுமொருவர்.

எல்லாவற்றையும் நிராகரித்து விட்டு, எந்தத் தனித்திறமையும் இல்லாத பிழைக்கத் தெரியாத பேதை என்று மனப்பூர்வமாக க் கருதுகிறவர்களும் உண்டு தான்.

இதில் எது நான்? எந்த நானைப் பற்றி எழுத?

 

ஒருவன் கயிறென்றான்

இன்னொருவன் சுவரென்றான்

பிறிதொருவன் தூண் என்றான்

மேலுமொருவன் முறமென்றான்

நான் யானை.

-          பாரதி கிருஷ்ணகுமார்

 

© All Rights Reserved

Web Design