அறிவிப்புகள்

'என்று தணியும்...'

'கவிஞர் மேகலன்"

அவர் படம் வெற்றியடைய நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து கரம் உயர்த்துவோம்.

நம்மை நாம் உண்மையான கண்ணாடியில் பார்க்கும் சந்தர்ப்பம் அல்லவா

நம் B.K வின் இப்படம்.ஆமாம் நீங்கள் 'என்று தணியும்...' படம் பார்த்து விட்டீர்களா?

முதல் காதல் ஜாதி வெறிக்கு....அந்த தாயுள்ளம் கொண்டப் பெண், அவள் ஆசைப்படும்

காதலனை அடைய துடிக்கும் நிலையில்....அங்கு நிகழ்ந்த கொடுமை.....

நம் இதயம் துடிக்கிறது.இரண்டாவது காதல் வெற்றிதான் அடைந்திருக்க வேண்டும்

என்று நாம் ஆசைப்பட்டால் அது தான் நிகழ்ந்திருக்கும்."சாதிகள் இல்லையடி பாப்பா",

என்று கற்றுதரும் ஆசிரியரை அவ்வூர் ஆளூமை மிரட்டும் இடமும், 'டீ' கடையில்

தனி டம்பளர் வைத்து டீ அளிக்கும் காட்சியில் அந்த தனி டம்பளர்கள் தேசிய கொடியை

போன்று குச்சியில் வைக்கப்பட்டிருப்பது நம் அனைவரின் தலையிலும் சாதியென்னும்

வெறி தனது காலால் மிதிப்பதாகத்தான் உணர முடிகிறது.தன் தம்பியை இடுப்பில்

வைத்துக் கொண்டு முள் செடியை வெட்டி கட்டி இழுத்து வரும் காட்சி மனதில்

நீர் கோர்க்கிறது.இரண்டு காதலுமே இயல்பாக நிகழ்கிறது. இதில் எந்தவிதமான சினிமா

தனமும் இல்லை.மற்றொன்று பணிபுரியும் இடத்தில் எந்தவிதமான மன சஞ்சலத்துக்கும்

ஆட்படாத முன்னரே கூறிய அக்காவின் தம்பி மீது அங்கு பணிபுரியும் பெண் கொள்ளும் காதல்.

படிப்பினை மறுத்து தனது தம்பியை வளர்க்கும் பொறுப்பினை ஏற்கும் அக்காவின் தாயுள்ளம்,

தான் வேலை செய்யும் இடத்தில் தன்னை போன்ற ஏழைக்கு உதவும் ஆண்மகன் மேல்

காதல் கொள்கிறது.இரண்டு காதல் மனங்கள் கூடும் சங்கமம் இக்கதை.

இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார் என்ற உயர்ந்த மனிதன் அளித்துள்ளதால்

இது உண்மையை மட்டுமே பேசுகிறது.

Last Updated (Monday, 06 March 2017 06:36)

 

© All Rights Reserved

Web Design