அறிவிப்புகள்

மாதம் ஒரு இலக்கியப் படைப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம்,

நண்பர்களுக்கு வணக்கம்..! மாதம் ஒரு இலக்கியப் படைப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம்,

அடுத்ததாக கதையாடல் நிகழ்வு என்ற வரிசையில் #வாசகசாலையின்

அடுத்த முயற்சியாக இதோ "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை".

கடலால் மட்டும் அல்ல, கண்ணீராலும் சூழப்பட்டுள்ள இந்த தீவு தேசத்தின்,

தமிழ் பேசும் நிலப்பரப்பில் இருந்து, மானுடத்தின் எல்லா விழுமியங்களையும்

கேள்வி கேட்கும், வாசிப்பவர்களின் மனசாட்சியை கேள்விக்குள்ளாக்கும்

இலக்கிய ஆக்கங்கள் நிறைய உண்டு.

ஒரு இலக்கிய அமைப்பாக வாசகசாலைக்கு இத்தகைய ஆக்கங்களுக்கு சிறப்பானதொரு

இடமளித்து பேச வேண்டிய கடமையிருப்பதாக கருதுவதன் விளைவே

இந்த நிகழ்ச்சி வரிசை. இனி இரண்டு மாதங்களுக்கு

ஒருமுறை "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை" தொடரும்.

இந்த வரிசையில் முதலாவதாக சமீபமாக வெளியாகி இருக்கின்ற

, தமிழ்நதி அவர்களின் "பார்த்தீனியம்" நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாவலை வெவ்வேறு தளங்களில் இருந்து அணுகிப் பேச, தமிழின்

மரியாதைக்குரிய படைப்பாளிகள் காத்திருக்கிறார்கள்.வாசகர்

பார்வையில் புதிய முகங்களின் பார்வையும் வேறு கோணங்களை உங்கள் முன்வைக்கலாம்.

வாசகசாலையின் ஒன்றரையாண்டுக்கு மேலான பயணத்தில்

கண்டிப்பாக இது ஒரு முக்கியமான முன்னகர்வு. எல்லா தருணத்திலும்

எங்களுக்கு உறுதுணையாக இருப்பது நண்பர்கள்தான்.அவர்களுக்கு

எப்போதும் போல நன்றிகள் பல.உங்கள் அனைவரையும்

நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறேன். மகிழ்ச்சி..!

 

கவிஞர் கதிர்பாரதியின்

கவிஞர் கதிர்பாரதியின் 
"ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்" நூல் விமர்சனக் கூட்டம்.

உரை
கவிஞர் தமயந்தி
பேராசிரியர் பா.ரவிக்குமார்
கவிஞர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

சிறப்புரை
எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

ஏற்புரை
கவிஞர் கதிர்பாரதி

நன்றியுரை
அகரமுதல்வன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - ஆகுதி பதிப்பகம்

இடம் - டிஸ்கவரி புத்தக நிலையம் 
கலைஞர் கருணாநிதி நகர், சென்னை
நாள் - ஞாயிற்றுக்கிழமை ( 28.08.2016) காலை - 10 மணி

 

எல்லோருக்கும் பாடியவனை .

எல்லோருக்கும் பாடியவனை ....
எனக்கெனவும் பாடியவனை....
இழந்தேன் . அய்யோ....
துயர் மிகுந்து தவிக்கிறேன் .

 

துன்பத்திலே துணை இருந்தால் கண்ணீர்

இன்பத்திலே துணை இருந்தால் புன்னகை சொல்வது நன்றி ....
துன்பத்திலே துணை இருந்தால் கண்ணீர்
சொல்வது நன்றி ....
வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் .....
வார்த்தையின்றிப் போகும்போது
மெளனத்தாலே நன்றி சொல்வோம் ....
--- கவியரசு கண்ணதாசன்.

 

ஜுலை மாதம் 27 ஆம் தேதி திருநெல்வேலியில்

ஜுலை மாதம் 27 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில் தான்
திருவுடையானும் , நானும் சந்தித்துப் பேசினோம் . என்னைச் சந்திக்கவென்றே ,சங்கரன்கோவிலில் இருந்து வந்திருந்தார் .
ஆகஸ்டு 24 ஆம் தேதி அலைபேசியில்
உரையாடினோம் .
அதுவெல்லாம் 
இறுதிச் சந்திப்பு ,
இறுதி உரையாடல் , என்பதை 
இப்போது நம்பத் தானே வேண்டும் ......
நம் விருப்பங்களை மீறி 
நம்ப வைக்கிறது வாழ்வின் நிஜம்

 
B.K. அறிமுகம்


Get the Flash Player to see this player.

© All Rights Reserved

Web Design