அறிவிப்புகள்

அனைவரும், இதனை அனைவருக்கும்

அனைவரும், இதனை அனைவருக்கும்

பகிர்ந்திட வேண்டுகிறேன்

 

நண்பர் சகோதரர்

நண்பர்
சகோதரர்
மருத்துவர் . கு . சிவராமன் புத்தக வெளியீட்டு விழாவில் ......

 

 

பிகே என்கிற பேச்சுக்காரன்

பிகே என்கிற பேச்சுக்காரன்
------------------------------------------------------
(09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்)

கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதியவித்யாபவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்டு தமிழின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான பாரதிகிருஷ்ணகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அரங்கம் நிரம்பியிருந்தது. நிரம்பியிருப்பது முக்கியமல்ல. இருந்தவர்கள் அனைவரும் செவிகளைத்தவிர எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர் என்பது தான் சிறப்பு. திறந்து வைத்த செவிகளோடும் தீவிரமான ஈடுபாட்டோடும் பெற்றுக் கொள்ளும் பேரவாவோடும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எதிரில் இருக்க, திருவிழாக் கூட்டத்தையே பேசத்தொடங்கும் கணத்தில் கட்டுக்குள் கொண்டு வரக் கற்றிருக்கும் பாரதிகிருஷ்ணகுமார் போன்றோர்க்குச் சொல்லவும் தேவையில்லை.வேறு சில இடங்களில், கேட்போரைத் தன்வசம் கொண்டுவருவதற்காய்ச் செய்ய வேண்டிய பிரயத்தனங்களின் தேவையின்மை மேலும் அவருக்கு உற்சாகம் ஊட்டியிருக்குமென நம்புகிறேன்.தெளிந்த நீரோடையென சிறு சிறு சுளிவுகளுடன் கண நேர நுரைமுட்டைகள் தோன்றித்தோன்றி மறைய சிலுசிலுவென பாய்ந்தது உரை.

எழுதுவதற்கும் பேசுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.எழுதுவதற்கு அவகாசம் இருக்கிறது.அவசியமான சூழல்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.இல்லையெனில் எழுதாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வரலாம். நாம் படும் பாடுகளை வாசிப்பவர் அறியச் சாத்தியமில்லை. மேடைப்பேச்சு அவ்விதமன்று.நிறுத்தவோ பிறகு பார்த்துக் கொள்ளலாமென நினைக்கவோ முடியாது.
அடித்து எழுதமுடியாது.ஆனால் எழுத்துக்கு நிகராக கருத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய காரியம் மட்டும் நிகழவேண்டும்.அப்படி, சுவையாகவும் பயனாகவும் இருக்கும் உரையே மிகச் சிறந்ததாக அமையமுடியும்.அப்படியொரு உரை அன்றைக்கு அமைந்தது.

நான் இங்கு அவர் பேச்சின் கருத்துகளை இயன்றவரை அவரின் சொற்களைக் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். ஏனெனில், எழுதவேண்டுமென்பதற்காக குறிப்புகளோ ஒலிப்பதிவோ செய்யவில்லை. நினைவில் இருந்தே எழுதுகிறேன்.

”இன்றைய வாசிப்புச் சூழலில், முதல் வாசிப்பே அருகிப்போயிருப்பதை அறிய முடிகிறது.முன்பெல்லாம் 2500 நூல்கள் அச்சடித்தது போலில்லை. தொழில் நுட்பத்தின் உதவியால் வெறும் 25 நூல்களை மட்டும் தயாரிக்கிற நிலையிருக்கிறோம்.இந்தச் சூழலில் ஒரு படைப்பாளியின் படைப்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் அது குறித்து உரையாடுவதும் முக்கியமானது”,என்று குறிப்பிட்டார்.
”மறு வாசிப்பு என்பது ஒரு படைப்பை மறுபடியும் வாசிப்பது மட்டுமன்று.அவ்விதமாயின், மறுவாசிப்பு என்பது படைப்பு தன்னளவில் மாறது இருந்தபடியே முதல் வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் இடையிலான காலத்தில் அவனுக்குக் கிட்டியிருக்கும் அறிவின் தெளிவு அல்லது அறிவின் போதாமை இவற்றின் வாயிலாக புதிய பரிமாணங்களைக்கண்டடைவது”,என்றார்.
தொ.மு.சி யின் அணுகுமுறை அவரை மிகுந்த கோபக்காரராக அடையாளம் காட்டினாலும், அவருக்குள் இருந்த ஈரமான- ஈரமனப் பதிவுகளைச் சுட்டி அவரின் மறுபக்கத்தின் தரிசனத்தினைக் காட்டினார். 
தொ.மு.சி எழுதிய நாவல்கள்,கவிதை நூல்கள், சிறுகதைத்தொகுப்புகள், விமர்சனம் மற்றும் ஒப்பிலக்கிய நூல்கள், மொழி பெயர்ப்புகள் ஆகியவை குறித்த மெல்லிய அறிமுகம் கொடுத்தார்.
தொ மு சியின் ஒப்பிலக்கிய நூல்களான ,’பாரதியும் ஷெல்லியும்,’கங்கையும் காவிரியும்’, போன்றவற்றின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய பிகே , ’பஞ்சும் பசியும்’, நாவல் நெசவாளர் வாழ்வின் இன்னல்களையும் முக்கியத்துவத்தையும் பேசிய முதல் தமிழ் புதினமாகக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
மறுவாசிப்புக்காக அவர் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் மொழிபெயர்ப்பையும் பாரதி காலமும் கருத்தும் நூலினையும் எடுத்துக்கொண்டார்.
’தாய்’, நாவல் பலராலும் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் ரகுநாதனின் மொழிபெயர்ப்பின் சிறப்பை அடையாளப்படுதினார். தொ.மு.சி தமிழாக்கம் செய்யும் போது தான் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் அதில் வெளிப்படுவதைச் சுட்டிகாட்டி நம் பண்பாடு கலாச்சாரத்திற்கேற்ப சில சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருப்பதன் நுட்பத்தைக் குறிப்பிட்டார் பாரதிகிருஷ்ணகுமார்.
பாரதி: காலமும் கருத்தும் நூலின் தனித்துவம் பற்றியும் பாரதி குறித்து தொ.மு.சி வெளிப்படுத்தியிருக்கும் புதிய பார்வை மீதும் விளக்கமான தன் கருத்துகளை முன்வைத்தார்.குறிப்பாக, பாரதிக்கு தேசப்பற்று உருவானதற்கான அடிப்படைக் காரணம், காலம்,சூழல் மற்றும் பாரதி நிவேதிதாவைச் சந்தித்ததன் காலம் போன்றவற்றை தொ.மு.சி நிறுவியிருக்கும் பாங்கு மிக முக்கியமானது என கவனப்படுத்தினார் பிகே. காரணம், பிற ஆய்வுகளைப் போல் புறச் சான்றுகளைக் கொள்ளாமல் பாரதியிடமிருந்தே, அகச்சான்றுகள் வாயிலாக தொ.மு.சி ரகுநாதன் முடிவுகொள்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.
தொ.மு.சி குறித்த பறந்த வாசிப்பனுபத்தின் சாரமாக அமைந்திருந்த பாரதிகிருஷ்ணகுமாரின் பேச்சு, தொ.மு.சி யைப் படித்தவர்களை மறுவாசிப்புக்கும் வாசிக்காதவர்களை முதல் வாசிப்புக்கும் தூண்டுவதாக இருந்தது. நல்ல உரையின் நோக்கம் அதுவாகத்தானே இருக்க முடியும். பல பொழிவுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் பாரதிகிருஷ்ணகுமாருக்கு இந்தப் பொழிவுக்கான என் பாராட்டுகள்;பயன் பெற்றேன்.
நிகழ்வினை ஏற்பாடு செய்த இலக்கிய வீதி இனியவனுக்கு என் அன்பும் மரியாதையும் நன்றியும்.

தமிழ்மணவாளன்.

 

 

மயிலாப்பூர் இன்று வழக்கத்தை

மயிலாப்பூர் இன்று வழக்கத்தை விட அழகாக இருந்தது..

பாரதீய வித்யா பவன் அரங்கின் வெளியே மழை பொழிந்தது.. அரங்கினுள்

பாரதி கிருஷ்ணக் குமார் அவர்களின் சொற்பொழிவு ..

தொ. மு. சி.ரகுநாதன் அவர்களின் நூல்களுக்கான மறுவாசிப்பு

பற்றிய உரை.. அவர் புத்தகங்களின் வாயிலாக கார்க்கியின் 'தாய்'

மற்றும் பாரதியாரைப் பற்றிய, இதுவரை அறிந்திராத

பல தகவல்களை BK sir அவருக்கே உரிய உணர்ச்சிகரமான உரை ஆற்றலின்

வழியாக நம்முடன் பகிர்ந்து அவர்கள் உலகத்துக்கே

அழைத்துச் சென்றார். பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்துக்கும

மேலாக மந்திரத்தில் கட்டுண்டதைப் போல அமர்ந்திருந்தார்கள் என்று

சொல்லவும் வேண்டுமோ? அருமையான உரை..

காதில் கணீரென்று அவர் குரலும் மனதில்

அவர் உரையின் தாக்கமும் இப்பவும்..

வீட்டில் என்னிடம் இருக்கும்.

தொ.மு. சி.யின் தாய் புத்தகம் இன்று மிகை

அழகாக இருந்தது..நன்றி BK சார், இலக்கிய வீதி.

மறுவாசிப்பு 'தாய் '

-நன்றி 
லதா அருணாசலம்

 

நண்பர்களுக்கு வணக்கம்..! மாதம் ஒரு இலக்கியப் படைப்பு பற்றிய

நண்பர்களுக்கு வணக்கம்..! மாதம் ஒரு இலக்கியப் படைப்பு பற்றிய

கலந்துரையாடல் கூட்டம், அடுத்ததாக கதையாடல் நிகழ்வு என்ற வரிசையில் #வாசகசாலையின்

அடுத்த முயற்சியாக இதோ "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை".

கடலால் மட்டும் அல்ல, கண்ணீராலும் சூழப்பட்டுள்ள இந்த தீவு தேசத்தின்,

தமிழ் பேசும் நிலப்பரப்பில் இருந்து, மானுடத்தின் எல்லா விழுமியங்களையும்

கேள்வி கேட்கும், வாசிப்பவர்களின் மனசாட்சியை

கேள்விக்குள்ளாக்கும் இலக்கிய ஆக்கங்கள் நிறைய உண்டு.

ஒரு இலக்கிய அமைப்பாக வாசகசாலைக்கு இத்தகைய

ஆக்கங்களுக்கு சிறப்பானதொரு இடமளித்து பேச வேண்டிய

கடமையிருப்பதாக கருதுவதன் விளைவே இந்த நிகழ்ச்சி வரிசை.

இனி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை" தொடரும்.

இந்த வரிசையில் முதலாவதாக சமீபமாக வெளியாகி இருக்கின்ற,

தமிழ்நதி அவர்களின் "பார்த்தீனியம்" நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது

. நாவலை வெவ்வேறு தளங்களில் இருந்து அணுகிப் பேச, தமிழின்

மரியாதைக்குரிய படைப்பாளிகள் காத்திருக்கிறார்கள்.வாசகர் பார்வையில் புதிய முகங்களின் பார்வையும் வேறு கோணங்களை உங்கள் முன்வைக்கலாம்.

வாசகசாலையின் ஒன்றரையாண்டுக்கு மேலான பயணத்தில் கண்டிப்பாக

இது ஒரு முக்கியமான முன்னகர்வு. எல்லா தருணத்திலும் எங்களுக்கு உறுதுணையாக

இருப்பது நண்பர்கள்தான்.அவர்களுக்கு எப்போதும் போல

நன்றிகள் பல.உங்கள் அனைவரையும் நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறேன். மகிழ்ச்சி..!

 

 
B.K. அறிமுகம்


Get the Flash Player to see this player.

© All Rights Reserved

Web Design